
ஆதித்யா-எல் 1 விண்கலம் அறிவியல் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது…
பெங்களூரு: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலம், கடந்த 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியிலிருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் புள்ளி-1ஐ சென்றடையும்.
அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும்.அதற்கு முன்னதாக ஆதித்யா-எல் 1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும்போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் பூமியின் சுற்றுவட்டப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி கடந்த 3-ந்தேதி நடந்தது. தொடர்ந்து அடுத்து 2-ம் கட்டமாகக் கடந்த 4-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நடந்தது.
தொடர்ந்து 3-வது கட்டமாகச் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி கடந்த 10-ம் தேதியும், 4- வது முறையாகச் சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி 15-ந்தேதியும் வெற்றிகரமாக நடந்தது. இந்த நிலையில், ஆதித்யா-எல் 1 விண்கலம் அறிவியல் தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதிவெப்ப ஆற்றல், அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆதித்யா எல்-1 விண்கலம் அளவிடத் தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 50 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் STEPS என்ற கருவி செயல்படத் தொடங்கியது என்றும், STEPS கருவியின் சென்சார்கள் அதிவெப்ப மற்றும் ஆற்றல்மிக்க அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை அளவிடத் தொடங்கியுள்ளன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 6 சென்சார்கள் கொண்ட இந்த ஆய்வுக் கருவி வெவ்வேறு திசைகளிலும் தனது ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Aditya-L1 Mission:
Aditya-L1 has commenced collecting scientific data.The sensors of the STEPS instrument have begun measuring supra-thermal and energetic ions and electrons at distances greater than 50,000 km from Earth.
This data helps scientists analyze the behaviour of… pic.twitter.com/kkLXFoy3Ri
— ISRO (@isro) September 18, 2023



