Dharmapuri: தொடரும் சாதிய வன்மம்.. நடவடிக்கை எடுக்கச் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை!

Advertisements

தருமபுரி மாவட்டத்தில் மாட்டு இறைச்சி எடுத்துச் சென்ற பெண்ணை அரசுப் பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து பாதி வழியில் இறக்கி விட்ட சபவத்தில் நடத்துனர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமாரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓட்டுநர், நடத்துநர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த நவலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஞ்சாலை (வயது 59). தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர் நாள்தோறும் அரூர் நகரத்திலிருந்து நவலை கிராமத்திற்கு அவரது அன்றாட வாழ்விற்காக மாட்டிறைச்சி எடுத்துச் சென்று வியாபாரம் செய்வது வழக்கம். வழக்கம்போல் மாட்டிறைச்சி வாங்கி கொண்டு அரசு பேருந்தில் ஏறிப் பயணம் செய்துள்ளார்.

அப்போது பயணச்சீட்டு எடுக்க வந்த நடத்துனர்  ரகு என்பவர் இதற்கு முன் உன்னை எத்தனை முறை வர வேண்டாம் என்று சொல்லி இருந்தேன். இப்போது ஏன் வந்தாய் முதலில் பேருந்தை விட்டுக் கீழே இறங்கு என்று அவர் மனது புண்படும்படியும், மன உளைச்சலுக்கு ஆளாக்கி அரூர் மோப்பிரிப்பட்டி காட்டுப்பகுதியில் பேருந்தை நிறுத்திக் கீழே இறக்கி விட்டுள்ளார்.

மேலும் வயதான  அந்த மூதாட்டி, இன்று ஒரு நாள் மட்டும் என்னை விட்டு விடுங்கள். இனி நான் கொண்டு வரமாட்டேன். தயவு செய்து என்னை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் கூட இறக்கி விடுங்கள்  என்று நடத்துனரிடம் கேட்டுள்ளார்.

நாகை மீனவர்களின் வலைகளைக் கிழித்து புதுவை மீனவர்கள் அட்டூழியம்; மீனவர்கள் குமுறல் அதைப் பொருட்படுத்தாமல் நடத்துனர் அந்த மூதாட்டியை சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் சாலையிலேயே இறக்கி விட்டுச் சென்றுள்ளார். இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி உள்ள நிலையில், நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தருமபுரி மண்டல போக்குவரத்து நிர்வாகம்  நடத்துனர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமாரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஓட்டுநர், நடத்துநர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள்மீது இது போன்ற ஆதிக்க சாதியினர் ஏற்படுத்தும் இன்னல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் அரசு பணியாளர்கள்மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு தான் போபாளையம்பள்ளி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்குச் சிரட்டையில் டீக்கொடுத்த சம்பவம் அரங்கேறிய நிலையில் அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வதற்காகப் பேருந்தில் பயணம் செய்த முதியவர் ஒருவரை பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

தமிழக அரசு தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றக்கூடிய ஆட்சிக்கும் அரசுக்கும் அவபெயர் ஏற்படுத்தும் அரசு அலுவலர்களைக் கண்காணித்து காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *