
திருவண்ணாமலை மாவட்டம் வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடு புதைந்தது. வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
இதையடுத்து புயல், மழை பாதிப்புகுறித்து மத்தியக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கார்த்திகை தீபத்திருவிழாவினை ஒட்டித் திருவண்ணமலை வரும் பக்தர்கள் மலைமீது ஏற அனுமதி கிடையாது.
* மலையில் மகாதீபம் ஏற்றப்படும்போது பக்தர்கள் மலைமீது ஏற அனுமதி கிடையாது என மாவட்ட கலெக்டர் அறிவிப்பார்.
* திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவை தொடர்ந்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையின்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
* தீபத்திற்காக 4,500 கிலோ நெய் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* கோவிலிலிருந்து பரணி தீபத்தைக் காண 6,300 பேருக்கும் மகாதீபத்தை காண 11,600 பேருக்கும் அனுமதி தரும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.



