
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்து உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிமுகவில் ஏற்பட்ட உட் கட்சி பிரச்சினையால், அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டு வருகிறார். பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே இருப்பதால் சட்டரீதியாகவும் கட்சி, சின்னம் ஆகியவை அவரிடம் சென்றுள்ளது. இதை நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால், எடப்பாடிக்கு எதிராகத் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் அணையத்திற்கு உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.
தேர்தல் நெருங்குவதால் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப் புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடந்து வருவது கவனிக்கத்தக்கது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் தங்கள் தரப்பு மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக டெல்லி உயர்ந்நிதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.



