Delhi BJP: 18 நாளில் 4 கோடி; பா.ஜ.வின் ‘மின்னல்’ வேக சாதனை!

Advertisements

புதுடில்லி; 18 நாட்களில் 4 கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து பா.ஜ., வரலாற்று சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியில் சேருமாறு மக்களை வலியுறுத்தும். கட்சியின் மீது ஈடுபாடு, அபிமானம் கொண்டவர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு அதற்கான அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வர். இது அனைத்து அரசியல் கட்சிகளிலும் நடக்கும் நிகழ்வு.

இந்நிலையில் எந்தக் கட்சியும் செய்யாத சாதனையாக, 18 நாட்களில் 4 கோடி புதிய உறுப்பினர்களைப் பா.ஜ., சேர்த்து மற்ற கட்சிகளை மிரள வைத்துள்ளது. இந்தத் தகவலைப் பா.ஜ., தேசிய தலைமை தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; 18 நாட்களில் 4 கோடி உறுப்பினர்களைக் கடந்துவிட்டோம். இன்னமும் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு வருகின்றனர். மற்றுமொரு சாதனையைப் பா.ஜ., படைத்துள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கைகுறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே கூறி உள்ளதாவது; உறுப்பினர் சேர்க்கையில் புதுவேகம் உள்ளதுபோல், புதிய அடையாளங்களை உருவாக்குவது என்பதை பற்றி மக்கள் சிந்தித்து வருகின்றனர் என்று கூறி உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *