
வருகிற 26-ந்தேதி 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அணி வகுப்பு மற்றும் நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வருகிற 26-ந்தேதி வரை தினந்தோறும் 145 நிமிடங்கள் (அதாவது 2 மணி 25 நிமிடங்கள்) அதன் ஓடுபாதையை மூடுகிறது.
குடியரசு தினத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, காலை 10.20 மணி முதல் மதியம் 12.45 மணிவரை மூடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் 1,300-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே டெல்லியில் நிகழும் மூடு பனி காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
