இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூனுக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம்..!
57 வயதான கேமரூன் கடந்த 2016-ம் ஆண்டு பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதே ஆண்டு எம்.பி. பதவியிலிருந்தும் விலகினார்.
பிரிட்டன் முன்னாள் தலைவர் டேவிட் கேமரூன், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் ரிஷி சுனக் தனது உயர்மட்டக் குழுவை அமைத்த நிலையில், சுனக் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன்னை பாலஸ்தீன பேரணியை ஆதரித்ததாக கருத்து வெளியிட்டதைத் தொடர்ந்து பதவி நீக்கம் செய்துள்ள நிலையில் அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் க்ளெவர்லியை நியமித்தார்.
2021 ஆம் ஆண்டில், நிதிக் குழுவான கிரீன்சில் கேப்பிட்டலுக்காக இங்கிலாந்து அரசாங்கத்திற்கு எதிராக செய்த பரிமாற்றத்தில் அவர் ஊழலில் சிக்கியதால் அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் மேல் சபையான ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் கேமரூன் ஆயுட்கால உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்று டவுனிங் ஸ்ட்ரீட் அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.