D. Jayakumar Advice: வரலாற்றை மறைக்காமல் பேச ரஜினிக்கு அட்வைஸ்!

Advertisements

முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று முன்தினம் நடந்த விழாவில் உண்மைக்கு மாறாகப் பேசியுள்ளனர். இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இப்படி எல்லாம் நடக்கும் எனத் தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவைப் புறக்கணித்துள்ளனர் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்- அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா’ கலைஞர் 100′ என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த விழா நேற்று முன்தினம் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாகுறித்து அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்’புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், கருணாநிதி அவர்களால்தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதைபோல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நேற்று முன்தினம் நடந்த விழாவில் உண்மைக்கு மாறாகப் பேசியுள்ளனர். இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!

புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார்.ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது!அவரது உதவியால்தான் கருணாநிதியே முதல்-அமைச்சரானார்.

சினிமா துறையைச் சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்கச் சொல்லிக் கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே?இப்படி எல்லாம் நடக்கும் எனத் தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவைப் புறக்கணித்துள்ளனர்.’இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *