Crooked Forest: வளைந்து வளரும் அதிசய மரம்!

Advertisements

காடுகள் என்றாலே அடர்ந்த மரங்களும், வன விலங்குகளும் தான் நம் நினைவுக்கு வரும்.

காடுகள் பல வகை உண்டு வெப்பமண்டலக் காடுகள், பசுமைக் காடுகள், ஊசியிலைக் காடுகள், சதுப்பு நிலக் காடுகள், இலையுதிர்க் காடுகள் என காடுகள் இருக்கும் இடம், சீதோஷ்ணம், இலையின் வடிவம் , மற்றும் மரங்களின்  தன்மைகள் அடிப்படையில் காடுகளுக்குப் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

அது போன்று மரங்களின் வடிவத்தைப் பொறுத்து CROOKED FOREST  என்று அழைக்கப்படும்  வளைந்த  தண்டினைக் கொண்டு   வளைந்து  இருப்பதால் வளைந்த காடு என்று அழைக்கப்படுகிறது. போலந்து நாட்டி பொமெரேனியாவில் உள்ள கிரிபினோ நகருக்கு அருகில் அமைந்துள்ளது இக் காடு.பூமிக்கு  அடியிலிருந்து வடக்கு நோக்கி 90 டிகிரி வளைந்து பின்னர் மேல் நோக்கி வளரும்.

 

ஒரு தனித்துவமான ஈர்ப்பு விசையே  இப்படி வளரக் காரணம் எனக் கருதப்படுகிறது.   இயற்கைக்கு மாறாக முதல் 3 முதல் 9 அடி வரை வளைந்து இருந்தாலும் 50 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டது. போலந்தின் வடகிழக்குப் பகுதியில்  அடிக்கடி  வீசும்  பனிப்புயல்களால் தண்டுகள் வளைந்திருக்கலாம் என்றும் ஆய்வில் நம்பபடுகிறது.

இந்த காட்டில்  சுமார் 400 மரங்களுக்கு மேல் உள்ளது. 1930 -ஆம் ஆண்டில் நடப்பட்டுள்ளது. பூமிக்கு சற்று மேல் வளைந்து வரும் பைன் மரங்கள் 3 மீட்டர் வரை வளைந்து இருக்கும். இந்த வழியில் மரங்களை வெட்ட சில வகையான சிறப்புக் கருவிகள்  அல்லது தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது என்று பொதுவாகக் கூறப்படுகிறது. மரச்சாமான்கள் அல்லது படகு கட்டுமானத்தில் பயன்படுத்துவதற்காக இயற்கையாக வளைந்த மரங்களைப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வித்தியாசமான  மரங்கள் அடர்ந்துள்ளதால் மக்கள் ஆவலுடன் சென்று பார்த்து வருகின்றனர். பார்ப்பதற்கு மிக அழகாகச் சிறிய இருக்கைபோல  இருப்பதால் அதில் அமர்ந்து ரசிப்பர் சுற்றுலா பயணிகள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *