ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்! (Word of God)
நான் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்க விரும்புகிறேன். என் உள்ளத்தின் ஆழத்தில் ஆண்டவர் பேசும்போது, என் இருதயத்தில் கேட்கும் வார்த்தைகள் இவைகளே. ஒரு நாள் முழுவதுமோ, ஒரு வாரம் முழுவதுமோ அல்லது ஒரு வாழ்நாள் முழுவதுமோ கூட என்னை வழி நடத்தக்கூடிய அளவிற்கு இந்த “ரேமா” மிகவும் வல்லமை வாய்ந்தது.
இன்று, உன் செவியை (உன் இருதயத்தின் செவியை) திறந்து வைத்து, உனக்கான ஆண்டவரின் வார்த்தையை வைக் கேட்கும்படி உன்னை ஊக்குவிக்க விரும்புகிறேன். அவர் மட்டுமே உன்னை நன்றாக அறிந்தவர், இப்போது நீ கேட்க வேண்டிய வார்த்தைகள் என்ன என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். அவருடைய வார்த்தை உன்னை உற்சாகப்படுத்தி, இந்த நாள் முழுவதும் உன்னை வழிநடத்தட்டும்!
நண்பனே/தோழியே, இன்று மீண்டும் இயேசு உன் இருதயத்தில் பேசி உனக்கு ஊழியம் செய்யட்டும்.
பரிசுத்த ஆவியானவர்… கிரியை செய்கிறார்
