Sanjay Singh: கெஜ்ரிவாலை சிறையில் அடைக்கப் பெரிய அளவில் சதி!

Advertisements

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிறையில் அடைப்பதற்கு பாஜக மேல்நிலைத் தலைவர்கள் பெரிய அளவில் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், மதுபான கொள்கை ஊழலுக்கு பாஜகவே காரணம் என்றும் ஜாமினில் வெளியேவந்த ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.

கலால் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21-ல் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றநிபந்தனையை மீறி..சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த சஞ்சய் சிங் எம்.பி. இந்த விவகாரம் குறித்து வெளியே பேசக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கும்போது நிபந்தனை விதித்து இருந்தது.

ஆனால் அந்த நிபந்தனையை மீறி இது குறித்து செய்தியாளர்களுடன் சஞ்சய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொய்யான அறிக்கை”டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகவ் மகுண்டாவை கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பொய்யான அறிக்கையை வழங்குவதற்கு பாஜக அழுத்தம் கொடுத்தது.

கெஜ்ரிவாலுக்கு எதிராக தவறான அறிக்கையை வழங்குமாறு அவர் அழுத்தம் கொடுக்கப்பட்டார். ஆனால் அவர் மறுத்ததால், அவரது மகன் ராகவ் ரெட்டி கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ச்சியான கெடுபிடிகளுக்கு மத்தியில் பாஜக தலைவர் கொடுத்த அழுத்தம் காரணமாக ராகவ் ரெட்டி கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறினார்.

முதல்வர் அரவிந்த் கெஜாரிவாலை சிறையில் அடைக்க பெரிய சதி நடந்துள்ளது. மதுபான ஊழலுக்கு பாஜக தான் காரணம், அக்கட்சியின் மூத்த தலைமை இதில் ஈடுபட்டுள்ளது.

கெஜ்ரிவால் நேர்மையான வாழ்க்கையை நடத்தியவர். டெல்லி மக்களுக்கு நல்ல கல்வி மற்றும் நல்ல சுகாதார வசதிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.”

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பாஜக மற்றும் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகவரெட்டியின் தந்தை மகுந்தா ரெட்டி ஆகியோருக்கு இடையே உள்ள தொடர்பை பரிந்துரைக்கும் புகைப்படத்தையும் சஞ்சய் சிங் வெளியிட்டார்.

“5 மாத கால சித்திரவதைக்கு பிறகு ரெட்டி தனது அறிக்கை மாற்றிக் கொண்டதாகவும் டெல்லி முதல்வருக்கு எதிராக பொய்யான அறிக்கையை அவர் கொடுத்ததாகவும்” சஞ்சய் சிங் விளக்கம் அளித்தார்.

செப்டம்பர் 16ஆம் தேதி கெஜ்ரிவாலை உங்களுக்கு தெரியுமா? என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலில் அவரிடம் (முகுந்தா ரெட்டி )கேட்டபோது அவர் உண்மையை சொன்னார்.

மேலும் கெஜ்ரிவாலை அறக்கட்டளை விஷயத்தில் சந்தித்ததாகவும் கூறினார். ஆனால் அதன் பிறகு அவருடைய மகன் கைது செய்யப்பட்டார். ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவருடைய தந்தை அறிக்கையை மாற்றினார் என்றும் அவர் தெளிவு படுத்தினார்.

கெஜ்ரிவாலின் மனைவி பேட்டி அளித்த போது பகத்சிங் அம்பேத்கர் ஆகியோர் படங்களுடன் கெஜ்ரிவால்படத்தை வைப்பது தொடர்பான சர்ச்சை குறித்தும் சஞ்சய் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “மக்கள் அம்பேத்கர் பகத்சிங் ஆகியோர் படங்களுடன் செல்ஃபி எடுக்கிறார்கள்.

அனைத்து குடிமக்களுக்கும் இது போன்ற சிறந்த தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள உரிமை உண்டு. அவர்களைப் போலவே நாமும் பெரியவர்கள் என்று கூறிக் கொள்வதற்காக அல்ல; நாங்கள் அவர்களால் ஈர்க்கப்பட்டுள்ளோம் என்று தான் அதற்கு அர்த்தம்” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *