Congress Working Committee Meeting: பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்உள்பட 5 அம்ச வாக்குறுதிகளுக்குக் காங்கிரஸ் ஒப்புதல்!

Advertisements

மக்களவை தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் 5 அம்ச வாக்குறுதிகளுக்குக் காங்கிரஸ் செயற்குழுவில் ஒப்புதல் ;அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 5 அம்ச வாக்குறுதிகளும் பின்வருமாறு;

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்கிரஸ்
சமூக, பொருளாதாரம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மக்களவை தேர்தல் வாக்குறுதியாகக் காங்கிரஸ் அறிவித்தது.

ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ்
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

விவசாய பணிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு
விவசாய பணிகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

50% இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்கச் சட்டம்: காங்கிரஸ்
50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க அரசியல் சாசன திருத்தச் சட்டம் இயற்றப்படும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் திட்டத்துக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கப்படும்.

“ஒன்றிய அரசு பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு”
ஒன்றிய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

“100 நாள் வேலை ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும்”
100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கும் தேசிய குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 நிர்ணயம் செய்யப்படும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *