Karnataka Congress: பா.ஜ. எம்.பி. யை பாராட்டிய காங். தலைவர்!

Advertisements

ராகவேந்திரா போன்றவரை எம்.பி.,யாக கிடைத்தது உங்களது அதிர்ஷ்டம். தொகுதியில் நடந்த அனைத்து வளர்ச்சி பணிகளும் முடிவடைந்துள்ளது. சிவசங்கரப்பாவின் பேச்சு, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், ஷிவமோகா தொகுதி எம்.பி.,யுமான பிஓய் ராவேந்திரா, தொகுதிக்கு ஏராளமான பணிகளை செய்துள்ளார். அவரையே இத்தொகுதி மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான ஷாமனூர் சிவசங்கரப்பா கூறியுள்ளார். இது அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான ஷாமனூர் சிவசங்கரப்பா, விருது வழங்கும் விழா ஒன்றில் பேசியதாவது: ஷிவமோகா தொகுதியில் நடந்த வளர்ச்சி பணிகளை நான் பார்த்துள்ளேன். ஒரு நல்ல மனிதரையே, எம்.பி.,யாக இத்தொகுதி மக்கள் தேர்வு செய்துள்ளனர். மீண்டும் அவரையே மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

ராகவேந்திரா போன்றவரை எம்.பி.,யாக கிடைத்தது உங்களது அதிர்ஷ்டம். தொகுதியில் நடந்த அனைத்து வளர்ச்சி பணிகளும் முடிவடைந்துள்ளது. மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மக்களின் விருப்பப்படி பணியாற்றிய எம்.பி.,க்கள் வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சிவசங்கரப்பாவின் பேச்சு, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *