Lok Sabha Election 2024: காலை 11 மணி நிலவரப்படி ஓட்டுகள் பதிவு.. அதிகம் – மந்தம் எங்கே?

Advertisements

மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு செய்ய  இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.வாக்குப்பதிவிற்காகக் காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர்களும் வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில் காலை 7 மணிக்குத் துவங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 24.37 % ஓட்டுகள் பதிவாகியுள்ளன எனத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 27.63% ஓட்டுகள் பதிவாகியுள்ளது.

அதிகம் – மந்தம் எங்கே ?

அதிகபட்சமாகக் கள்ளக்குறிச்சியில் 26.58 % ஓட்டுகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 20.09 % ஓட்டுகளும் பதிவாகியுள்ளன.

தொகுதி வாரியாகப் பதிவான ஓட்டுப்பதிவு விவரம் வருமாறு:

திருவள்ளூர்-24.93 %,
வட சென்னை- 22.05 %,
தென் சென்னை- 21.97 %,
ஸ்ரீபெரும்புதூர்- 23.53 %,
காஞ்சிபுரம்- 24.65 %,
அரக்கோணம்- 24.71 %,
வேலூர்- 24.67 %,
கிருஷ்ணகிரி- 24.82 %,
தர்மபுரி- 25.66 %,
திருவண்ணாமலை- 24.92 %,
ஆரணி- 25.53 %
விழுப்புரம்- 25.69 %,
சேலம்- 25.97 %,
நாமக்கல்- 26.07 %,
ஈரோடு- 25.37 %,
திருப்பூர்- 25.47 %,
நீலகிரி- 24.00 %,
கோவை- 24.54 %,
பொள்ளாச்சி- 25.02 %,
திண்டுக்கல்- 26.34 %,
கரூர்- 26.07 %,
திருச்சி- 24.70 %
பெரம்பலூர்- 25.62 கடலூர்- 24.66 %,
சிதம்பரம்- 25.35 %,
மயிலாடுதுறை-24.76%,
நாகப்பட்டினம்- 24.92 %,
தஞ்சாவூர்- 24.96 %,
சிவகங்கை- 24.47 %,
மதுரை-22.73 %,
தேனி- 13.15 %,
விருதுநகர்- 24.99 %,
ராமநாதபுரம்- 23.89 %,
தூத்துக்குடி-24.16 %,
தென்காசி- 24.51 %
திருநெல்வேலி- 23.78 %
கன்னியாகுமரி- 24.68 %.
புதுச்சேரி – 27.63%
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் – 17.09 %

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *