Village Council Meeting: வெளுத்து வாங்கிய இளைஜர்.. திணறி பஞ்சாயத்து தலைவர்!

Advertisements

வாணியம்பாடி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் நிர்வாகிகளை வரவு செலவு கணக்கை பொதுமக்கள் மத்தியில் காண்பிக்க கோரியும், ஏரிக்கரையை பலப்படுத்த மண் எடுப்பதாக கூறி செங்கல் சூளைகளுக்கு மண் விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி வெளுத்து வாங்கிய இளைஞரால் பரபரப்பு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் சிலர் கலந்து கொண்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருப்பதி என்ற இளைஞர் பல கிராம சபை கூட்டத்தில் என்ன தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள் இதுவரை தெரியவில்லை.

வரவு செலவு கணக்குகளை கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படை  தன்மையாக காண்பிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தில் குறைந்தபட்சம் 300 பேருக்கு மேல் கலந்து கொள்ள வேண்டும் கூட்டம் குறித்த தகவல் ஊராட்சி நிர்வாகம் சார்பாக முறையாக  தகவல் அளிப்பதில்லை என அடுத்தடுத்து கேள்விகளால்  ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நிர்வாகிகளை வெளுத்து வாங்கினார்.

மேலும் இரண்டு ஆண்டுகளாக ஊராட்சிக்கு எந்தவித பணிகளும் முறையாக நடைபெறவில்லை எனும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ரேஷன் கடையில் வழங்கும் அரிசியில் ரப்பர் கலந்த அரிசி வழங்கப்படுவதாகவும் இதனை துறை சார்ந்த அதிகாரிகள் ஏன் வரவில்லை கிராமசபை கூட்டத்திற்கு எனவும் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய அவர் அங்குள்ள கவுண்டன் ஏரி கரையை  பலப்படுத்த 16.23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதி என்ன ஆனது மேலும் ஏரியில் எடுக்கும் மண் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கும் வீடு கட்டுபவர்களுக்கும் விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி பேசியது கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்  பொதுமக்கள் மத்தியில் பதில் சொல்ல முடியாமல் திணறினா். இதனால் கிராம சபை கூட்டத்தில் சில மணி நேரம் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *