திமுக-வுக்கு ராகுல் காந்தி கொடுத்த ஷாக்..!

Advertisements
வருகிற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக தரப்பில் காங்கிரஸ் கூட்டணியுடன் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. அதிகபட்சம் 30 தொகுதிகளை ஒதுக்கி தருவதாக திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நிலவி வரும் சூழ்நிலையில் திடீரென ராகுல் காந்தி பல்டி அடிக்க போவதாக தெரிகிறது.தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் மிகப்பெரிய வாய்ப்புகள் தரப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இறுதி கட்டமாக காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி சேரும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 25 தொகுதிகளில் போட்டியிட்டது இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.இந்த நிலையில் தற்பொழுது காங்கிரஸ் கட்சியினர் கூடுதலாக தொகுதி ஒதுக்கி தரும்படி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதில் உச்சகட்டமாக முப்பது தொகுதிகள் வரை ஒதுக்கி தரலாம் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .ஆனால் குறைந்தபட்சம் 35 தொகுதிகளை ஒதுக்கி தரப்பட வேண்டுமென காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது .
திமுகவை பொருத்தவரையில் தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என விரும்புகிறது எனவே 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட வேண்டும் அந்த வகையில் எப்படியாவது 120 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் விடுதலைச் சிறுத்தைகள் மதிமுக கம்யூனிஸ்டுகள் என அனைத்து கட்சியினருக்கும் தொகுதிகளை அதிகப்படுத்தி தரவேண்டிய சூழல் ஏற்படும் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழக வெற்றிக்கழகத்தை பொருத்தவரையில் சரியான கூட்டணி எதுவும் அமையவில்லை. கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டால் தேர்தலில் வெற்றி கிடைக்காது என்ற சூழ்நிலையும் நிலவுகிறது.ஏற்கனவே தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளும் தங்களுடைய கூட்டணி பற்றி ஒரு வித முடிவுக்கு வந்திருப்பதால் தற்பொழுது தமிழக வெற்றி கழகத்திற்கு கூட்டணி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைமைக்கு தமிழக வெற்றி கழகம் தள்ளப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு எந்த வகையிலாவது காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.இதற்கு இடையே தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடுவதற்கு சரியான வேட்பாளர்களும் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது பெரும்பாலான வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமலும் தேர்தல் செலவுக்கு போதிய நிதி ஆதாரங்கள் இல்லாமலும் இருக்கிறார்கள் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் கூட்டணியில்  சேர்த்துக் கொண்டால் டெல்லி மேலிடத்திலிருந்து தேர்தல் செலவு நிதிகளை பெற்றுக் கொள்ள முடியும் வேட்பாளர்கள் தேர்வும் எளிதாக இருக்கும் என தமிழக வெற்றி கழகம் நம்புகிறது.இதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கி தரலாம் என்றும் ஒரு துணை முதல்வர் பதவி தரப்படும் என்றும் இதுவல்லாமல் மூன்று அமைச்சர் பதவிகள் தரப்படும் என்றும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான தகவல்கள் சில முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.இது தொடர்பாக ராகுல் காந்தியும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். ஏன் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை விட புதிய முயற்சி எடுத்து தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என ராகுல் காந்தி ஆலோசிப்பதாக தெரிகிறது.
எனவே தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் தரப்பில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.திமுக தரப்பில் தொகுதி பங்கீடு மட்டுமல்லாமல் மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் அநேகமாக தமிழக வெற்றி கழகம் பக்கம் காங்கிரஸ் கட்சி திசை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *