
கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும்.
ஏற்கனவே, பெட்ரோலிய எரிபொருளுக்கு மாற்றாகத்தான், சுற்றுசூழலுக்கு உகந்த எல்.பி.ஜி. கேஸை பயன்படுத்தி, இயங்கும் வாகனங்கள் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வு காரணமாக பலரும் எல்பிஜி கேஸ் வாகனங்களுக்கு மாற தொடங்கியதுமே, பெட்ரோல், டீசல், சிலிண்டர், கேஸ் விலையுடன், ஆட்டோ எல்பிஜி கேஸ் விலையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தப்பட்டு வருகிறது.
அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் ரூ.1.69 காசுகளும், அக்டோபர் மாதம் ரூ.6.11 காசுகளும், நவம்பர் 1ம் தேதி முதல் இப்போதுவரை ரூ.3.04 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன.
சுருக்கமாக சொல்லப்போனால், கடந்த 3 மாதங்களில் ரூ.11 வரை ஆட்டோ எல்பிஜி கேஸ் உயர்ந்துள்ளது.. கேஸ் ரூ.86க்கு விற்கப்படுவதால் வாடகை வாகன ஓட்டிகளும் பெருத்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும்.
அந்தவகையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.39 குறைந்து ரூ.1,929.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1,968.50 ல் இருந்து ரூ.1,929.50 ஆக குறைந்திருக்கிறது. இந்த விலை குறைவு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.


