Traffic Awareness Rally: ஆர்வமுடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள்!

Advertisements

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர், இதில் ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்துப் பேரணியை துவக்கி வைத்தார்,

சென்னை புறநகர் பகுதியான ஆவடி  அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் இணைந்து  பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  ஆவடிசின்னம்மன் கோவில் அருகே போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் கொடி அசைத்துத் தூக்கி வைக்கப் பேரணி மூர்த்தி நகர், பருத்திப்பட்டு, அய்யன்குளம் வழியாகக் கல்லூரிவரை மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு  வாசகங்கள் கொண்ட பாதாகைகளை கையில் ஏந்தியபடி வாசகங்கள் சொல்லிக்கொண்டு ஐந்து கிலோ மீட்டர்வரை நடைபயணமாகவிழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்பு மாணவ மாணவிகளிடம் போக்குவரத்து ஆய்வாளர் அவர்கள் விழிப்புணர்வாகப் பேசுகையில்
கல்லூரியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் சாலையில் வாகனம் ஓட்டிச் செல்லும் நபர்களிடம் இந்தத் தகவல்களைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் வாகனங்கள் ஓட்டிச் செல்லும்பொழுது கட்டாயம் கைபேசி உபயோகப்படுத்தக் கூடாது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று பல்வேறு வாசகங்கள் கொண்ட துண்டுப் பிரசுரங்கள் வாகன ஓட்டிகள் இடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவிஆய்வாளர் ராஜேந்திரகுமார் விஜி ராய் மற்றும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *