கோகோ காப் புதிய சாம்பியன்!

ரியாத்:

டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் தொடரில் முதன் முறையாகக் கோப்பை வென்றார் கோகோ காப்.

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், உலகத் தரவரிசையில் முன்னணியில் உள்ள 8 வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, முதலில் லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் ‘டாப்-2’ இடம் பிடித்தவர்கள் அரையிறுதிக்கு முன்னேறினர்.

பைனலில், அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் சீனாவின் குயின்வென் ஜெங் மோதினர். முதல் இரு செட்டை குயின்வென் (6-3) மற்றும் கோகோ காப் (6-4) மாறிமாறி கைப்பற்றினர். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ‘டை பிரேக்கரில்’ குயின்வென், 7-6 என அசத்தினார். 3 மணி நேரம், 7 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில், கோகோ காப் 3-6, 6-4, 7-6 என வென்று சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 40.50 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது.

டபிள்யு.டி.ஏ. பைனல்ஸ் தொடரில் கோகோ காப் வென்ற முதல் கோப்பை இது. செரினா வில்லியம்சிற்குப் பின் (2014), இத்தொடரில் கோப்பை வென்ற அமெரிக்க வீராங்கனை ஆனார். மேலும், 2004ல் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்குப் பின், இத்தொடரில் சாதித்த இளம் வீராங்கனை ஆனார் கோகோ காப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *