தொடர் விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு!

Advertisements

ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பு காரணமாகக் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. அந்தப் பாதிப்பிலிருந்து அந்த மக்கள் மீண்டு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.

3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 2 ஆதி திராவிட நல தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருவெண்ணெய்நல்லூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் தண்ணீர் வடியாத காரணத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மழைநீர் வடிந்து சகஜநிலை திரும்பிய நிலையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *