CM Stalin: புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!

Advertisements

M.K. Stalin | Lay foundation stone

புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்…

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.08.2023) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 80 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகம், தடுப்புச் சுவர்கள், முடிகாணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், உணவருந்தும் கூடம், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரி ஆய்வகங்கள் போன்ற புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் இதுவரை 6,962 திருக்கோயில்களில் 3,373 கோடி ரூபாய் செலவில் 9,294 திருக்கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் – தேக்கம்பட்டி, அருள்மிகு வனபத்ர காளியம்மன் திருக்கோயிலில், 14.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்று பிரகார மண்டபம், நடைபாதை மண்டபம், சுற்றுச்சுவர் மற்றும் முடிகாணிக்கை மண்டபம் அமைக்கும் பணிகள்; மதுரை மாவட்டம்- திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக் குளத்தையொட்டி தடுப்புச் சுவர் அமைத்தல் மற்றும் கந்த சஷ்டி மண்டபம் கட்டும் பணிகள்;

திருவள்ளூர் மாவட்டம் – திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் காத்திருக்கும் கூடம், உணவருந்தும் கூடம் கட்டும் பணிகள்;
சேலம் மாவட்டம் – மேச்சேரி, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 4.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி, உணவருந்தும் கூடம் மற்றும் செயல் அலுவலர்கள் குடியிருப்பு கட்டும் பணிகள்; சென்னை – பள்ளிக்கரணை, அருள்மிகு வீரத்தம்மன் திருக்கோயிலில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; புதுக்கோட்டை மாவட்டம் – நார்த்தாமலை, அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி; தஞ்சாவூர் மாவட்டம் – தாமரங்கோட்டை, அருள்மிகு கண்டேஸ்வரர் திருக்கோயிலில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணி; திருவள்ளூர் மாவட்டம் – சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 3.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளத் திருப்பணி; கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், அருள்மிகு திருவிக்ரம சுவாமி திருக்கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தெப்பக்குளம் மற்றும் தீர்த்தக்குளங்களை சீரமைத்து நீராழி மண்டபம் கட்டும் பணி;

கடலூர் மாவட்டம் – சிதம்பரம், அருள்மிகு தில்லையம்மன் திருக்கோயிலில் 2.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருக்குளம் மேம்படுத்தும் பணி; சென்னை – சைதாப்பேட்டை, அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 2.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணி; விழுப்புரம் மாவட்டம் – மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் 1.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; திருவாரூர் மாவட்டம் – வலங்கைமான், அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயிலில் 1.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்காணிக்கை மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைபாறும் மண்டபம் கட்டும் பணி; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – குமாரவயலூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 1.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன் மண்டபத்தைச் சீரமைக்கும் பணி;

சென்னை – திருவல்லிக்கேணி, அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் சார்பில் 8.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள்; மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் கட்டும் பணி; நாகப்பட்டினம் மாவட்டம் – சிக்கல், அருள்மிகு நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயிலில் 1.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர், அருள்மிகு காளிகாம்பாள் காமாட்டீஸ்வரர் திருக்கோயிலில் 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மலர் வணிக வளாகம் கட்டும் பணி; திண்டுக்கல் மாவட்டம் – பழனி, அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 5.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகங்கள் கட்டும் பணி; என மொத்தம் 80 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *