மாநகர பேருந்துகள் சிக்னல்லில் நிர்க்க தேவையில்லை!

சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது,

சென்னையில் உள்ள சிக்னல்களில், மாநகர பஸ்கள் அதிக நேரம் நிற்பதை தவிா்க்கும் வகையில் சென்னை ஐ.ஐ.டி, திருவனந்தபுரத்தைச் சோ்ந்த சி.டி.ஏ.சி. மையம் சாா்பில் ‘பஸ் சிக்னல் முன்னுரிமை’ என்ற திட்டம் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் படி, சிக்னல் அருகே மாநகர பஸ்கள் நிற்கும்போது பச்சை விளக்குகள் கூடுதல் நேரம் ஒளிரும் வகையில் சிக்னல்களில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசலில் பஸ்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை குறையும். மேலும் எரிபொருள் செலவைக் குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்காக ஜி.எஸ்.டி. சாலையில், ஆலந்தூா் முதல் சென்னை விமான நிலையம் வரையிலான வழித்தடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் உள்ள சிக்னல்களிலும், மாநகர பஸ்களிலும் தொழில் நுட்பத்தைச் செயல்படுத்தும் வகையில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படவுள்ளன. சிவப்பு விளக்கு எரியும் சிக்னலை மாநகர பஸ் அடையும்போது, ஜி.பி.எஸ். சிக்னலை போக்குவரத்து சிக்னல்கள் அடையாளம் கண்டு கொள்ளும். பின்னா் பஸ்சுக்கு வழிவிடும் வகையில் சிக்னலில் தானாகவே பச்சை விளக்கு எரியும். இதன் மூலம் பஸ்கள் தேவை இல்லாமல் நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க தேவையிருக்காது.

பொதுமக்களும் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். இதைக் கண்காணிக்க மாநகர போக்குவரத்து கழகம், போக்குவரத்து காவல் துறை சாா்பில் ஆய்வுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காகத் தமிழக அரசு, போக்குவரத்து துறை மற்றும் சென்னை ஐ.ஐ.டி. சாா்பில் ரூ. 82 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதியில் இந்தத் திட்டத்துக்கான சோதனை முயற்சி தொடங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *