காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் – அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டிரம்ப் வரையறுத்தக் காசா அமைதி திட்டத்துக்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் இடையே இரண்டு ஆண்டுகளாகப் போர் தாக்குதல் நடந்ததில், 65 ஆயிரம் பேர் பாலஸ்தீனியர்கள் உயிர் மாய்க்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் மேற்கொள்ள காசா அமைதி திட்டத்தை முன்வைத்தார்.

இது, தொடர்பக எகிப்தில் நடந்த மாநாட்டில் டிரம்ப் முன்னிலையில் 20 க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் கையெழுத்திட்டனர். பின்னர், போர் முடிவுக்கு வந்த நிலையில், பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைப்படுத்த அமெரிக்கா சார்பில் அமைதி வாரியம் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, காசா அமைதி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து அமைதி வாரியம் அமைத்து காசாவில் அமைதிப்படை வீரர்களை நிலைநிறுத்துவதற்காக வரைவு தீர்மானம் ஒன்றை டிரம்ப் முன்னெடுத்தார். இதுகுறித்து, அவர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில், அவருக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தது. இதைத்தொடர்ந்து, அமைதி திட்டத்தின் வரைவு தீர்மானத்திற்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் அளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *