C. Subramania Bharatiyar: பெண்களுக்காக குரல் கொடுத்த பாரதியார்!

Advertisements

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா என்றார் கவிஞர் ஒருவர். தமிழ்க் கவிதை அத்தியாயத்தில் ஓர் அங்கம் வகித்தவன் பாரதி.

வீரம், விவேகம், அன்பு, கனிவு, பரிவு, ஆன்மீகம், பொதுநல சேவை, தொலைநோக்கு பார்வை,  செறிந்த அறிவு, காக்கை குருவி கூட அவர் கவிதையில் இடம் பெறும். சமுதாய சிந்தனை, தமிழ் தாயின் செல்லப்பிள்ளை , பெண்களின் உரிமை, எழுத்தாளர், பத்திரிகையாளர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி .. இன்னும் ஓராயிரம் உண்டு அவரைப் பற்றிக் கூற .. அவர்தான் மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

பாருக்குள் பெண்களின் பாங்குயர பாட்டுப் படித்தான் பாரதி. காக்கை, குருவி, கண்ணன், கண்ணம்மா என அனைவருக்குமான கவிஞனானான் பாரதி.இன்று டிசம்பர் 11- ஆம் தேதி பாரதியார் சமுதாய சீர்திருத்தத்தின் சாரதி, தமிழ் தாயின் செல்லப்பிள்ளை பாரதியின் பிறந்த நாள் இன்று.

தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரத்தில் சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும்  பிறந்தார் பாரதி. தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.

வெள்ளை வேட்டி, கருப்புக் கோட்டு, மிடுக்காய் முண்டாசு, முறுக்கு மீசை என நம் கண்முன் அவரது கம்பீர தோற்றம்தான் தோன்றும். தோற்றத்தில் மட்டுமா கம்பீரம்? அவர் குரல், எழுத்து, செயல், வாழ்க்கை, சிந்தனை, கற்பனை என அனைத்துமே கம்பீரம் தான்.அந்த கம்பீரத்துக்கு ஏற்றவர் தான் அவர். அவருக்கு மட்டுமே அந்த கம்பீரம் பொருந்தும்.

நம் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போது தன் பாடல்கள் மூலம் மக்கள் மனங்களில் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தினார் பாரதி. சிறையில் அடிபட்டு, செக்கிழுத்து, வலியுடன்  பெற்ற சுதந்திர போராட்டத்தின் அருமை  அவரது நன்றாகவே தெரியும்.

பெண் விடுதலைக்காக போராடிய துணிச்சலான ஆண்மகன், காக்கை, குருவி என அனைவரையும் சமமாக பாவித்த சமத்துவவாதி, நிறம் பார்க்காதே குணம் பார் என போதித்த ஞானி. தன் நாட்டுக்கும், மொழிக்கும், மக்களுக்கும், சமூகத்துக்கும் சரி என தோன்றிய அனைத்தையும் அவர் செய்தார்.

அமரகவி பாரதி;

சுப்பிரமணிய பாரதிக்கு ‘அமரகவி’ என்ற ஒரு பெயரும் உண்டு. அவர் இயற்றிய பாடல்கள் எல்லா காலத்திற்கும் ஏற்றவையாய் இருந்தது தான் காரணம்.  தீர்க்கதரிசியாக அவர் கூறிய அனைத்தும் தற்போது பொருந்துகிறது. சுனை நீராய் ஊற்றெடுத்த அவரின் சிந்தனை வியக்கத்தக்கது.

சமுதாய சீர்திருத்தத்தின் சாரதி, தமிழ்த்தாயின் செல்லப்பிள்ளை பாரதி எழுதிய வரிகளில் சில இதோ.. ஏழையென்று அடிமை என்று எவருமில்லை சாதியில் இழிவு கொண்ட மனிதரென்ப திந்தியாவில் இல்லையே….’

சமுதாயத்தில் பாகுபாடு பார்ப்பதை கடுமையாக சாடினார். இந்தியாவில் யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை என்று பாடினார். தனி ஒருவனுக்கு உணவிலையெனில் இஜ்ஜகத்தினை அழித்திடுவோம் என்றாரே அவரின் இரக்கம் வெளிப்பட்ட வரிகள்.

பெண்விடுதலை;

பெண்களுக்காக குரல் கொடுத்த பெருமைக்குரியவர்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும்..
ஆணுக்கிங்கே பெண்கள் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று  என அவர் எழுதிச் சென்ற வரிகள் பெண்களுக்கு உறுதியையும் துணிவையும் கொடுத்துள்ளன. புதுமைப் பெண்களடி பூமிக்கே கண்களடி..

பெண்களுக்கு எதிராக நடந்த தேவையற்ற சடங்கு என்ற பெயரில் பல கொடுமைகளைக் கணு கொத்திது எழுந்தார். கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும்.  தீயின் நாவிற்கு தன் தீஞ்சுவை மேனியை ஒரு பெண் தீனியாக்கிய போதெல்லம் அந்த முண்டாசு கவிஞரின் மனம் பதபதைத்தது.
சோதனைகளைக் கண்டு துவண்டு விடாதே, அதை சாதனையாக்கிக் காட்டு’ என பெண்ணினத்தை புதிய பாதையில் அழைத்துச் சென்றார்.

அங்கிலேயரின் அச்சம்;

!, ஆங்கிலேயர்களின் கண்களில் அச்சத்தை வரவழைத்தார். விடுதலை வெறியால் நம் அச்சத்தை இடம் மாற்றி ஆங்கிலேயனுக்கு ஏற்படுத்தினார். அரண்டு மிரண்டு போனான் ஆங்கிலேயன்.

தன் கவிதைகளால், மக்களின் வலுவிழந்த  கால்களை வலிமை வாய்ந்த கால்களாக்கினார். ஏந்திய கைகளை எதிர்த்து கை நீட்டி கேள்வி கேட்க வைத்தார். சுதந்திர தாகத்தை தூண்டினார். விடுதலைப் பெற விழிப்புணர்வு பாடல்களைப் பாடினான் பாரதி.
பாருக்குள் பெண்களின் பாங்குயர பாட்டுப் படித்தான் பாரதி…
காக்கை, குருவி, கண்ணன், கண்ணம்மா என அனைவருக்குமான கவிஞனானான் பாரதி….
காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கறிய நிறம் தோன்றுதடா நந்தலாலா.. ஆன்மீகம் செறிந்த அற்புத வரிகள்..
வாழவேண்டிய வயதில் தந்து 39- ஆவது வயதில் 1921-ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12-ஆம் தேதி உயிரிழந்தார். காலத்தால் மறைந்தார். கவிதையால் நம்முடன் வாழ்கிறார்.. வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *