Chinnamanur: குப்பை மற்றும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்!

Advertisements

சின்னமனூரில் தேங்கி கிடக்கும் குப்பை மற்றும்  கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம், ஏற்பட்டுள்ளதாகபொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர், மாவட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகராட்சியாக உள்ளது.இங்கு 27 வார்டுகளில் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காகப் பல்வேறு பகுதிகளில் குளங்கள் மற்றும் பூங்காக்கள் என அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி நடைபாதைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் சின்னமனூர் 22 வது வார்டு பகுதியில் விஸ்வன்குளம் குளத்தைச் சுற்றி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 74 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை அமைத்துத் தூர்வாரபட்டது.

இக்குளத்தை சுற்றி வீடுகள், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, மற்றும் அரசு மாணவிகள் விடுதியென அமைந்துள்ளது.இந்நிலையில் குளத்தில் தேங்கியுள்ள தண்ணீர் பச்சை பசேல் எனக் குப்பைகளுடன் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்த வருகின்றனர்.

மேலும் குளத்திலிருந்து கொசுக்கள் அதிகரித்து வருவது மட்டுமின்றி தொற்று நோய் பரவும் அபாயமும் மேலும் இதனைத் தடுக்க குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிவிட்டு முறையாகப் பராமரிப்புடன் மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் இது போன்ற அரசு வரி பணங்களை வீணடிக்காமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *