திருப்பரங்குன்றம் கோவிலில் பால்குடத் திருவிழா- பக்தர்கள் தரிசனம்!

திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக் கோவிலில் நடைபெற்ற  பால்குடத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமிக் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, பால்குடத் திருவிழா நடைபெற்றது.
முன்னதாகக், காப்பு கட்டி விருதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் பால் காவடி எடுத்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாகக் கோவில் வந்தடைந்தனர்.
இதன்பின்னர், சுவாமிக்குச் சிறப்புப் பால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *