Advertisements

திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காகக் குதிரை பேரம் நடத்தியதே எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நாடே அறியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜய் பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனந்த மோகன், சண்முகன், தமிழ்ச்செல்வி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்தனர். இதன்பின்னர், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழகத்தைப் பொறுத்தவரை மக்கள் விரும்பும் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். குதிரை பேர ஆட்சி நடைபெறுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், முதலில் குதிரைப் பேரத்தை நடத்தியது யார்? திமுகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் பேசியது யார்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் பொதுச்செயலாளராக இருந்த காலத்தில் அதிமுகவும் திமுகவும் கூட்டணி அமைத்ததே இல்லை என்று கூறினார். திமுக ஜெயலலிதா மீது வழக்குப் போட்டு அவரை சிறையில் அடைத்தது.
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு, திமுகவுடன் கூட்டணி வைப்பதற்காகக் குதிரை பேரம் நடத்தியதே எடப்பாடி பழனிசாமி தான் என்பதை நாடே அறியும் என்று கூறினார்.
Advertisements


