Carrot Burpee:இந்தத் தீபாவளிக்கு ஒரு கேரட் பர்பி..குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்!

Advertisements

கேரட் பர்பி

உங்க வீட்டுல கேரட் இருக்கா ? அப்போ உடனே இந்த ரெசிபிய தீபாவளிக்கு செஞ்சு உங்க வீட்டுலருக்கவுங்கள அசத்துங்க …..

தினமும் கேரட் உட்கொண்டால் பல நன்மைகள் பெறலாம். கேரட்யில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. கேரட்டை பச்சையாகவோ, பொரியல் செய்தோ அல்லது இனிப்பாக ஹல்வா போன்றும் சாப்பிடலாம். கேரட் தினமும் சாப்பிடுவதால் சருமணத்திற்கு பொலிவு உண்டாகும், கண் குறைப்பாடு பிரச்சனை சீராகும், மூட்டு வலி, இருதய நோய்களையும் கட்டுப்படுத்தும். மேலும் உடலுக்குத் தேவையான ஆற்றலையும் கொடுக்கக் கூடியது கேரட்.

கேரட் பிர்பிகு செய்வதற்கு தேவையான பொருட்கள்:

கேரட் துருவல் – 1 கப்
பாதாம் – 5
முந்திரி – 5
ஏலக்காய் – 2
சர்க்கரை – 1/2 கப்
மில்க்மெய்ட் – 1/4 கப்
பால் – 3 டேபுள் ஸ்பூன்
நெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் கேரட்யை நன்கு கழுவி சுத்தம் செய்தபின், துருவி எடுத்துக்கொள்ளவும்.
* அதன்பிறகு, அடுப்பைப் பற்றவைத்து கடாயை வைத்து நெய் ஊற்றிக் கொள்ளவும்.
* நெய் நன்றாகக் காய்ந்தவுடன் துருவிய கேரட் யை நெய்யில் சேர்த்து அடிப்பிடிக்காமல் வதக்க வேண்டும்.
* கேரட் வதங்கியபிறகு, பால் சேர்த்து வேகவைக்க வேண்டும்.
* அதன் பிறகு, சக்கரை, மில்க்மெய்ட் சேர்த்து கேரட் உடன் ஒன்று சேர்ந்து சுருண்டு வரும் வரை வதக்க
வேண்டும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சுருண்டவுடன் முந்திரி, பாதாம், ஏலக்காய் வருத்து
இத்துடன் சேர்க்கவும்.
* இறுதியாக, ஒரு தட்டில் சிறிது நெய் தடவி அதில் நாம் தயார் செய்த கேரட் பர்பியை தட்டில் கொட்டி மிதமான
சூட்டில் இருக்கும்பொழுது தட்டைத் தட்டையாகத் தட்டி, தேவையான அளவில் பர்பி போன்ற வடிவில்
வெட்டிக்கொள்ள வேண்டும்.
அவ்ளோதான், கேரட் பர்பி ரெடி……. கேரட் ஏ சாப்பிட புடிக்காத குழந்தைங்க கூட விரும்பிச் சாப்பிடுவாங்க இந்தக் கேரட் பர்பிய

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *