
சென்னை பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் இந்த ரயில் சோதனை ஓட்டத்திற்காக ஓட்டுநருடன் இயக்கப்பட்டது. முன்னதாக 5 மணிக்கு சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மின் கம்பிகள் இணைப்பு காரணமாக தாமதமானது. பின்னர் மின் கம்மிகள் முழுவதுமாக இணைக்கப்பட்டு அடுத்தடுத்து மின் கம்பிகள் வெடித்து சிதறியது.
இதனை அடுத்து மெட்ரோ ஊழியர்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக சீர் செய்து ஒழுங்கு படுத்திய பின்னர் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
