
அஜய் சிங்கின் எழுதிய பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி -நரேந்திர மோடி ஆங்கில நூலின் தமிழாக்க நூலைபாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நூலை அறிமுகம் செய்தார்.
இன்று சென்னையி்ல், டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தவிழாவில் அஜய் சிங்கின் எழுதிய பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி -நரேந்திர மோடி ஆங்கில நூலின் தமிழாக்கம் பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது.இதில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நூலை அறிமுகம் செய்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த அஜய் சிங்கின் பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி -நரேந்திர மோடி ஆங்கில நூலை, தமிழில் திரு ரங்காச்சாரி மொழிபெயர்த்துள்ளார்.
விழாவில் முன்னிலை வகித்துச் சிறப்பித்த, காமராஜ் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர், தமிழருவி மணியன் அவர்கள், மணிப்பால் பல்கலைக்கழகப் பேராசிரியர் சேஷாத்ரி சாரி அவர்கள், இந்து தமிழ் திசை பத்திரிகை இயக்குனர் விஜயா அருண் அவர்கள், விழாவுக்குத் தலைமையேற்ற இந்து தமிழ் திசை பத்திரிகை ஆசிரியர் கே.அசோகன், பத்திரிக்கையாளர் ஷபி முன்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.


