சட்டமன்றத் தேர்தலில் இரண்டு மூன்று நான்காம் இடங்களை யார் பிடிப்பது எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கும், திமுகவுக்கும் இடையே போட்டி உள்ளதாகத் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமையில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மண்டலத் தலைவர்கள், அணி பிரிவுத் தலைவர்கள், சக்தி கேந்திரப் பொறுப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்ட அமைப்பு பொதுச்செயலாளர் கிருஷ்ணன், மாவட்டப் பொதுச் செயலாளர் பாலகுருநாதன், அருள் செல்வன், மாவட்டப் பொருளாளர் கோதை மாரியப்பன், தென்காசி நகரத் தலைவர் சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தெருமுனைப் பரப்புரை நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டது.
அதன்பின் பேசிய ஆனந்தன் அய்யாசாமி, சட்டமன்றத் தேர்தலில் இரண்டு மூன்று நான்காம் இடங்களை யார் பிடிப்பது எனத் தமிழக வெற்றி கழகத்துக்கும் திமுகவிற்கு இடையே தான் போட்டி எனத் தெரிவித்தார்.


