
Chandrayaan-3 LIVE Updates | Vikram Lander | Propulsion Module
நிலவை நெருங்கிய சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து, விக்ரம் எனும் லேண்டர் பாகம் வெற்றிகரமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது…
கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், பல கட்ட பயணத்திற்கு பிறகு நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி நேற்று, நிலவிற்கும் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் இடையிலான குறைந்தபட்ச தூரம் 153 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 163 கிலோ மீட்டராகவும் நிலைநிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் எனும் லேண்டர் பாகம் வெற்றிகரமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில்“ நிலவை நோக்கி லேண்டரை உந்தித்தள்ளும் அடுத்தகட்ட பணி, நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், புரபல்சன் அமைப்பு தொடர்ந்து தற்போதுள்ள சுற்றுவட்டப் பாதையிலேயே சில மாதங்கள் அல்லது வருடங்களுக்குப் பயணிக்கும். இந்தப் பயணத்தின்போது அதில் உள்ள ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் மூலம் பூமியின் வளிமண்டலத்தை ஆய்வு செய்து மேகங்களிலிருந்து துருவமுனைப்பு மாறுபாடுகளை அளவிடும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.



