
Chandrayaan-3 LIVE Updates Vikram Lander
நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறங்கி முதல் நாடு என்ற சாதனையைப் இந்தியா படைத்துள்ளது…
நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறங்கி முதல் நாடு என்ற சாதனையைப் இந்தியா படைத்துள்ளது.வெற்றிகரமாக சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதற்க்கு பிரதமர் மோடி, அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலன்கள் எனப் பல்வேறு தரப்புமக்களும் இஸ்ரோவிஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
சென்னை: நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காகக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ‘சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
‘சந்திரயான்-3’ விண்கலத்திலிருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில்தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்தனர்.
முன்னதாக லேண்டரை தரையிறக்கும் பணி மாலை 5.44 மணிக்குத் தொடங்கி படிப்படியாக8 கட்டங்களாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது.அதன் பின்னர்வெற்றிகரமாக நிலவில் நிலைநிறுத்தப்பட்டது விக்ரம் லேண்டர்.
இந்தியாவின் பெருமையாகக் கருதப்படும் இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்துவருகின்றனர். பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ‘சந்திரயான்-3’-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சி இஸ்ரோவின் இணையதளம், இஸ்ரோ பேஸ்புக் பக்கம் மற்றும் அரசுத் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதை உலக மக்களும் பார்த்து வியந்துவருகின்றனர்.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதற்க்கு பிரதமர் மோடி, அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலன்கள் எனப் பல்வேறு தரப்புமக்களும் இஸ்ரோவிஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறங்கி கால்பதித்த முதல் இந்தியநாடு என்ற சாதனையைப் படைத்துள்ளது.

