
திருப்பதியில் நேற்று கோவில் மற்றும் ஆன்மீகம் தொடர்பான ஒரு மாநாடு நடைபெற்றது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உட்பட மூன்று மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, சந்திரபாபு நாயுடு தனது காரில் புறப்பட்டுச் சென்றார். மங்கலம் என்ற இடத்திற்கு செல்லும்போது, சேஷாசல நகரத்தைச் சேர்ந்த அஜீஷ் பாஷா என்ற தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர், நரைத்த தலைமுடியுடன் சாலையில் நின்றுகொண்டிருந்தார்.
அவரைப் பார்த்ததும், சந்திரபாபு நாயுடு தனது டிரைவருக்குக் காரை நிறுத்துமாறு உத்திவிட்டார்.
கார் நிறுத்தப்பட்டதும், கண்ணாடியை இறக்கி, சாலையோரம் நின்ற அஜீஷ் பாஷாவின் பெயரைக் கூறி, அருகே வருமாறு அழைத்தார். இதனைக் கேட்ட அஜீஷ், உணர்ச்சி அடைந்து அருகே சென்றார். சந்திரபாபு நாயுடு அவருக்கு நலம் விசாரித்தபிறகு, புறப்பட்டுச் சென்றார். இதனால், சாலையோரம் நின்ற தொண்டர் மிகுந்த உணர்ச்சியில் இருந்தார்.
