Advertisements
பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மரணம்.. ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தெலுங்கு பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 11 -ஆம் தேதி உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு உட்பட 942 திரைப்படங்களில் நடித்துள்ளார். `நாளை நமதே’ படத்தில் புரட்சித் தலைவர் MGR க்கு அண்ணனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது உடல் இறுதி மரியாதை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நாளை மறு நாள் நடைபெறும் என தெரிகிறது. அவரது ரசிகர்கள் மற்றும் தெலுங்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.