
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (National Curriculum Framework) பரிந்துரைப்படி இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இந்த வகையில் தேர்வு நடத்தப்படும். 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்குத் திறந்த புத்தகம் முறையி தேர்வு நடத்தப்படும்.
இவ்வாறு நடத்துவதன் மூலம், மாணவர்கள் தேர்வுகளை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கில் கொள்ளவும் பிறரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறவும் முடியும் என்றும் சிபிஎஸ்இ எண்ணியுள்ளதாகத் தெரிகிறது.
முதல் கட்டமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்படும். முன்னதாகக் கொரோனா காலத்தில் புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுதும் முறையை அறிமுகம் செய்த டெல்லி பல்கலைக்கழகத்திடம் அறிவுரை பெறப்படும் என்றும் கூறப்படுகிறது.


