
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பின் நாயகன் தனுஷ் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷனும் போன்ற பலர் நடித்துள்ள படம் ” கேப்டன் மில்லர்”. இந்த படத்திற்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதையடுத்து அவர் இன்று ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.
“ஜூலை 28ஆம் தேதி சம்பவம் இருக்கு..” என்று அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கேப்டன் மில்லர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங் இல் உள்ளனர். இந்த படத்தின் போஸ்டரை தவிர வேறு படக்குழு வெளியிடவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் “சம்பவம் இருக்கு” என ட்வீட் செய்துள்ளதால் படத்தின் முதல் சிங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அல்லது முதல் சிங்கிள் முன்னாேட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


