இந்தோனேசியாவில், தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிவிரைவு ரயிலை, அந்நாட்டு அதிபர், சீனாவின் நிதி உதவியுடன் நிறுவியுள்ளார்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தென்கிழக்கு ஆசியாவில் முதல் முறையாக அதிவிரைவு ரயிலைப் பொது மக்கள் சேவைக்காக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தோனேசியா, ஜகார்த்தாவில், வர்த்தக சேவைக்காகச் சீனாவின் நிதி உதவி மற்றும் சாலை தொழில்நுட்பத்துடன் கூடிய முக்கிய நகரங்களை இணைக்கும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது அதிக செலவின் காரணமாகக் கால தாமதம் ஆனது. மேலும் இத்திட்டமானது வர்த்தகத்திற்கு மட்டுமே பயன்படும் என்ற கருத்து நிலவிய நிலையில் அதிபர் விடோடோ 142 -கிலோ மீட்டர் (88 மைல்கள்) நீளமான ரயில் பாதை திட்டத்திற்காகப் போக்குவரத்து துறையின் அனுமதிக்கான ஒப்புதலைப் பெற்றார்.

இத்திட்டத்திற்காக 7.3 பில்லியன் டாலர் சீனா நிதியுதவி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பி.டி. கெரேட்டா செபட் இந்தோனேசியா- சீனா நிறுவனங்கள் இணைந்து இத்திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல் கூறப்படுகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள மேற்கு ஜாவா பகுதியில் தொடங்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். முக்கிய நகரங்களான வக்து ஹேமட், ஒபராசி ஆப்டிமை போன்றவை வழியாகச் செல்லும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் திட்டமும் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


