புதுடில்லி:
டில்லியில் இன்று 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகப் பள்ளிகள், கல்லூரிகள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து நடக்கிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று(டிச.,09) டில்லியில் 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சல்மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டில்லி போலீசார் கூறியதாவது: வெடிகுண்டுகள் வெடிக்கும்போது பலருக்கு காயம் ஏற்படும் என மர்மநபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். 30 ஆயிரம் டாலர் கொடுத்தால் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யப்படும் மர்மநபர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.


