Anasuya bharadwaj: குடும்பத்துடன் கவர்ச்சி குளியல் போட்ட புஷ்பா பட வில்லி!

சுகுமார் – அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளிவந்த புஷ்பா படத்தில் வில்லியாக நடித்துப் பிரபலமான நடிகை அனசுயா பரத்வாஜின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகளுள் அனசுயா பரத்வாஜும் ஒருவர். இவர் தெலுங்கில் சின்னத்திரை தொகுப்பாளினியாகப் பணியாற்றி வந்தார். அங்கு ஏராளமான சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை அனசுயா தொகுத்து வழங்கி இருக்கிறார். அதன் மூலம் அவருக்குப் புகழ் வெளிச்சமும் கிடைத்தது.

சின்னத்திரையில் பேமஸ் ஆக இருந்த அனசுயா கடந்த 2010-ம் ஆண்டே திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். திருமணத்துக்குப் பின்னர் சினிமாவில் எண்ட்ரி கொடுத்த அனசுயா, முதல் படத்திலேயே கவர்ச்சி நடனம் ஆடி டோலிவுட்டை அதிரவிட்டார்.

அதன் பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்த ரங்கஸ்தலம் திரைப்படத்தில் கொல்லி ரங்கம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் அனசுயா. அப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய அனசுயாவுக்கு, சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படத்தில் டெரரான வில்லி கதாபாத்திரம் கிடைத்தது. அதில் அசத்தலாக நடித்து அசத்திய அனசுயா, அதன் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

புஷ்பா 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர தமிழில் பிளாஷ்பேக் என்கிற திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்துள்ளார். விரைவில் இப்படமும் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், நடிகை அனசுயா பரத்வாஜ் தன்னுடைய மகன்கள் மற்றும் கணவருடன் கோடை விடுமுறைக்கு சுற்றுலா சென்று அருவி ஒன்றில் ஆனந்தக் குளியல் போட்டுள்ளார். நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக அனசுயா பரத்வாஜ் நடத்திய போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *