ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு..!

Advertisements

சீசெல்ஸ் நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மைன் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவர் தலைமையிலான பிரதிநிதிகள் விரிவாகப் பேச்சு நடத்தியுள்ளனர்.

சீசெல்ஸ் நாட்டின் அதிபர் பேட்ரிக் ஹெர்மைன் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் தில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இரு நாட்டுத் தலைவர்களும், உயர்நிலைக் குழுவினரும் பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாகப் பேச்சு நடத்தியுள்ளனர்.

மும்பைக்குச் செல்லும் சீசெல்ஸ் அதிபர் அங்குக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவாலுடன் பேச்சு நடத்த உள்ளார். அதன்பின் சென்னையிலும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *