Black Gouni Rice Pudding: சத்தான தானிய வகையில் செய்து சாப்பிடக் கூடிய ஒரு உணவு

Advertisements

கருப்பு யானைக் கவுனி  அரிசி புட்டு பற்றி பார்க்கலாம்.

பாரம்பரிய உணவு தானியம் என்றால் அரிசி தான். தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி வகைகளுக்கு மாறி இருக்கிறோம். அதில் கருப்பு கவுனியும் ஒன்று. தெற்கு பகுதியிலும் இவை அதிகமாக பயிரிடப்படுகிறது.

இந்த கருப்பு கவுனி அரிசியை சாப்பிட குழந்தைகள் மறுத்தால் அவர்களுக்கு பிடித்தமான வகையில் சத்தானதாக சுவைபட செய்து கொடுக்கலாம். கருப்பு கவுனியில் சுவைபட தயாரிக்கும் கருப்பு கவுனி உருண்டை அல்லது புட்டு தயாரிக்கும் முறை குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

கருப்பு கவுனி அரிசி- 1/2 கிலோ
நாட்டு சர்க்கரை- 1/4 கிலோ
ஏலக்காய் – 2
தேங்காய்- 1 மூடி துறுவியது

செய்முறை;

கருப்பு கவுனி அரிசியை சுத்தம் செய்து நன்றாக கழுவி தண்ணீர் முழுக்க வெளியேற்றியதும் அறைவெப்பநிலையில் உலர விடவும்.
தண்ணீர் முழுவதும் இறங்கியதும் ஈரப்பதமாக இருக்கும் போது மிஷினில் மாவாக அரைக்கவும்.
இந்த மாவை இட்லி பானையில் ஆவி கட்டி , சலித்து மாவாக்கி மீண்டும் வெயிலில் உலர்த்தி கொள்ளவும்.
கட்டியில்லாமல் கண்ணாடி பாட்டில் அல்லது பாத்திரத்தில் பதப்படுத்தி கொள்ளவும். இது ஆறு மாதங்கள் வரையிலும் கெடாமல் இருக்கும்.
அகலமான பாத்திரத்தில் மாவை கொட்டி இலேசாக உப்பு தெளித்து கிளறவும். அதிகமாக தண்ணீர் சேர்த்தால் கட்டி தட்டி விடும்.
கட்டியில்லாமல் உதிர இருக்க வேண்டும். அதே நேரம் மாவு ஈரப்பதமாகவும் இருக்க வேண்டும். மாவை கட்டியில்லாமல் கிளறவும்.
மாவு சல்லடையில் சலிக்கலாம். இப்போது மாவு தயார். தேங்காய் உடைத்து துருவிக்கொள்ளவும்.
மாவை வெள்ளைத்துணியில் இட்லி பானையில் ஆவி கட்டி வைக்கவும். அதன் மேல் தேங்காய்த்துருவல் வைக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து வேகவைத்ததை மற்றொரு பாத்திரத்தி போட்டு இனிப்புக்கு ஏற்ப நாட்டுச்சர்க்கரை அல்லது ஏலக்காய் சேர்த்து கிளறவும். இப்போது அப்படியே பரிமாறலாம்.

நன்மைகள்;

நீரிழிவு இருப்பவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *