பாஜக 50 தொகுதிகளில் போட்டியா? நயினார் நாகேந்திரன் பரபரப்பு.!

Advertisements
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி விட்டது இன்னும் இரண்டு மாதங்களே இடைவெளியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி சேர்க்கை தொடர்பாக இறுதி முடிவுகளை எடுத்து வருகின்றன.  இருந்த போதிலும் தொகுதி பங்கீடுகள் இன்னும் முடிவடையவில்லை .
இந்த நிலையில்,  பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் தமிழ்நாடு முழுவதும் 50 சட்டசபை தொகுதிகளுக்கு நயினார் நாகேந்திரன் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார். இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி 50 தொகுதிகளை குறி வைக்கிறதா என்ற பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது .
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி விவகாரங்கள், பிரச்சாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு என மும்முரமாக செயல்பட தொடங்கி விட்டார்கள் . வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கட்சி இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக அமைந்திருக்கிறது .
இந்த கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்,  ஜி கே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ்,  பாரிவேந்த தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி,  AC . சண்முகம்  தலைமையிலானபுதிய நீதி கட்சி,  ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்,  பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன .
இந்த நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் , தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் சட்டப்பேரவை தொகுதிகளின் பாரதிய ஜனதா கட்சி சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் .
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை பொருத்தவரையில் சிங்காநல்லூர் மதுரை தெற்கு விருகம்பாக்கம் காரைக்குடி ஸ்ரீவைகுண்டம் பத்மநாபபுரம் ஆகிய ஆறு தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் . மத்திய இணை அமைச்சர் எல் முருகனைப் பொறுத்தவரையில் திருப்பரங்குன்றம் ராதாபுரம் வால்பாறை திருப்பூர் வடக்கு உதகமண்டலம் ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் .
தமிழிசை சௌந்தரராஜனை பொருத்தவரையில் மயிலாப்பூர் கும்மிடிபூண்டி நாங்குநேரி பொள்ளாச்சி கிள்ளியூர் ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் . பொன் ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி,  பழனி , மேட்டுப்பாளையம் , பரமக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன .
வானதி சீனிவாசனுக்கு கோயம்புத்தூர் தெற்கு , குன்னூர்,  திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன . கே டி ராகவனை பொருத்தவரையில் பூவிருந்தவல்லி மற்றும் வானூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன . வி பி துரைசாமிக்கு எழும்பூர் ராசிபுரம் பரமத்தி வேலூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது போன்ற தமிழ்நாடு முழுவதும் 50 தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சி டெல்லி மேலிடம் தமிழ்நாட்டில்50 தொகுதிகளை குறி வைக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக , அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி இறுதி கட்டமாக 56 தொகுதிகளை கேட்டு வருவது  குறிப்பிடத்தக்கது.  ஆனால் 56 தொகுதிகளை ஒதுக்க முடியாது என அதிமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது .
அதிமுகவை பொறுத்த வரையில் 160 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது . அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 56 தொகுதிகளை ஒதுக்கினால் அதிமுகவின் தொகுதிகள் குறைய வாய்ப்பு இருக்கிறது எனவே இதற்கு எடப்பாடி பழனிச்சாமி மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 50 தொகுதிகளை குறி வைத்து சுற்றுப்பயண பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி நியமித்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *