Gold Price Hike in Chennai: ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை!

Advertisements

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 உயர்ந்து ரூ.46,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்திலிருந்து  ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்குக் கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.200 உயர்ந்து ரூ.46,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.81.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *