
”ஆட்டை வெட்டி இருக்கிறார்; திமுகவினர் என்மீது கை வைக்கட்டும்.” என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தேர்தல் முடிவுகள், அதிமுக- பாஜக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விசயங்கள்பற்றிப் பேசியுள்ளார்.அதிமுக – பாஜக கூட்டணி பிரிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று எஸ்.பி. வேலுமணியில் கருத்திற்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சியாகப் பார்க்கப்படும் மற்றொரு கட்சியான அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. மேலும், அதிமுக தென் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், தேனி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்விகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “ பாஜக கூட்டணியில் இருந்தபோது அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிகமாகப் பேசியதாகப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஆனால் அதிகமாகப் பேசியது அண்ணாமலைதான்.” என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பதில்:
இது தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளத்துள்ள அண்ணாமலை,” எடப்பாடி பழனிசாமி வேலுமணிக்கு இடையே உட்கட்சி பிரச்சனை இருப்பது போலத் தெரிகிறது. அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். அதுதான் தேர்தல் தரும் பாடம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


