Bharat Jodo Nyay Yatra: 5 நாட்கள் யாத்திரைக்கு ஓய்வு அளித்த ராகுல் காந்தி.. என்ன காரணம் தெரியுமா?

Advertisements

லண்டனிலிருந்து நாடு திரும்பும் ராகுல் காந்தி, மார்ச் 2ம் தேதி ராஜஸ்தானின் டோல்பூரிலிருந்து மீண்டும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்குகிறார்.

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று உத்தர பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். கான்பூர் யாத்திரை இன்று முடிந்ததும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஓய்வு எடுக்கிறார். அதன்பின்னர் 24-ம் தேதி மொராதாபாத்திலிருந்து தொடங்கி சம்பால், அலிகர், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா மாவட்டங்கள் வழியாக 25ம் தேதி ராஜஸ்தான் செல்கிறார்.

இதையடுத்து 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதிவரை 5 நாட்கள் யாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக ராகுல் காந்தி லண்டன் செல்கிறார். 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். அதன்பின்னர் நாடு திரும்பும் அவர், டெல்லியில் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.

அதன்பின் மார்ச் 2ம் தேதி ராஜஸ்தானின் டோல்பூரிலிருந்து மீண்டும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்குகிறார்.இத்தகவலை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *