“பல கோடி வணக்கங்கள்” – பகத் சிங்கை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

தியாகி பகத் சிங்கின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பல கோடி வணக்கங்களைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தியாகி பகத் சிங்கின் பிறந்தநாளில் அவருக்குப் பல கோடி வணக்கங்கள் என்று தெரிவித்துள்ளார். தமது தளராத துணிச்சல் மற்றும் வீரத்தின் மூலம், அவர் விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய உத்வேகத்தை ஊட்டியதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கௌரவத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அவரது மனப்பான்மை, இந்திய இளைஞர்களின் துணிச்சல் மற்றும் உறுதியின் அடையாளமாகத் திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *