Beauty tips: ஆண்கள் முகம் பொலிவுப்பெற செய்யவேண்டியவை!

Advertisements

பொதுவாகவே அழகு தொடர்பான குறிப்புகள் என எதை எடுத்துக் கொண்டாலும் அதில் பெண்களுக்கான முக்கியத்துவமே அதிகமாக இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் எப்படி ஆணும் பெண்ணும் சமம். இருவரும் எல்லாவற்றிலும் பொதுவானவர்கள் என்ற கருத்து நிலவுகிறதோ, அதே போல அழகு விஷயத்திலும் ஆண்களும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளவும் பொலிவாகக் காட்டிக் கொள்ளவும் விருப்பப்படுகிறார்கள்.

இப்படி தங்களை நல்ல நிறத்துடனும், அழகாகவும் காட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் ஆண்கள் இந்தப் பதிவில் இருக்கும் இரண்டு எளிமையான அழகு குறிப்புகளைத் தெரிந்து கொண்டால் போதும். எப்போதும் அவர்கள் ஆசைப்பட்டது போல அழகான தோற்றத்தைப் பெறலாம். ஆண்களின் கருப்பான முகத்தைக் கலராக மாற்ற இந்தப் பேக் தயாரிக்க முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் இரண்டு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் அதிகம் புளிக்காத தயிர் இரண்டையும் சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பேக்கை போடுவதற்கு முன்பாக முகத்தைச் சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பிக் காட்டன் துணி வைத்து முகத்தைத் துடைத்து விடுங்கள். இப்போது இந்தப் பேக்கை உங்கள் முகத்தில் தேய்த்த பிறகு 15 நிமிடம்வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு மீண்டும் சுத்தமான தண்ணீர் வைத்து முகத்தை அலம்பி விட்டால் போதும்.

உங்கள் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி முகத்தில் இருக்கும் கருத்திட்டுக்கள் மாறி முகம் பொலிவாக மாற ஆரம்பிக்கும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நிச்சயம் உங்கள் நிறம் மாறுவதை நீங்களே உணர முடியும்.

இதே பேக்கையே வேறு விதமாகவும் தயார் செய்யலாம். இந்த முறையும் நல்ல பலனையே தரும். இதற்கு இரண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு டீஸ்பூன் அதிகம் புளிக்காத தயிர், ஒரு டீஸ்பூன் தக்காளி சாறு இவை மூன்றையும் குழைத்து பேஸ்ட் போலச் செய்தபின், முன்பு சொன்னதை போல முகத்தைச் சுத்தம் செய்து இந்தப் பேக்கை போட்டு 15 நிமிடம் கழித்து மறுபடியும் சுத்தம் செய்து விடுங்கள்.

இந்தக் குறிப்பையும் வாரம் இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது உங்கள் முகத்தில் உள்ள கருமை நிறம் நீங்கி முகம் நல்ல பொலிவாக மாற ஆரம்பிக்கும்.

இந்த இரண்டு எளிமையான குறிப்புகளையும் தெரிந்து கொண்டு வீட்டில் நீங்களே இதுபோலச் செய்து கொள்ளும்போது முகம் நல்ல பொலிவாக மாறும்.

பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் சற்று கடினமானதாக இருக்கும். அது மட்டுமின்றி பெண்களைவிட ஆண்கள் வெளியில் அதிகம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கும். அது போன்ற சமயத்தில் வீட்டிற்கு வந்தவுடன் இந்தப் பேக்கை முகத்திற்கு போடும்போது வெயிலினால் ஏற்படும் கருத்திட்டு கூட உடனே மறைந்து விடும். இந்த இரண்டு எளிய குறிப்பில் உங்களுக்கு விருப்பமானதை செய்து பலன் பெறலாம்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *