கஷ்டப்படாமல் நீங்கள் இஷ்டப்பட சைஸ்க்கு மாறலாம்…..

Advertisements

உடல் எடையைக் குறைக்க எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முடியவில்லையென நினைப்பவர்கள் இந்தச் சிம்பிள் ஸ்டெப்ஸ் ஃபாலோ பண்ணி ஈசியா எடை குறைக்கலாம்…

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால்‌ கடுமையாக உடற்பயிற்சி வேண்டும் என்ற எண்ணம் தான் பலருக்கு வரும். ஆனால் எவ்வளவு தான் மாங்கு மாங்கு என்று ஒர்க் அவுட் செய்தாலும் உடல் எடை குறைவில்லை என்று புலம்புவோரும் இருக்க தான் செய்கிறார்கள்.

இப்படி பெரிதும் மெனக்கெடாமல் முறையான டயட் ஃபாலே செய்தாலே உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கலாம். இந்த டயட் என்பதையும் பலரும் தவறாகப் புரிந்து கொண்டு ஒரேயடியாகச் சாப்பிடாமல் இருக்க நினைக்கின்றனர்.

டயட் என்றால் சாப்பிடாமல் இருப்பதோ அரிசி சோறு எடுக்காமல் இருப்பதோ கிடையாது. உடலுக்குத் தேவையான சரியான கலோரிகளை எடுத்துக்கொள்வதே டயட். இப்போது உடலுக்கு ஒரு நாளைக்கு 1500 கலோரிகள் தேவை என்றால் அதே அளவுள்ள கலோரி உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிக்காமல் தவிர்க்கலாம்.

டயட் எடுத்துக் கொள்வதுடன் சேர்த்து சிறிது உடல் பயிற்சியும் எடுத்துக்கொண்டால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனும்போது கலோரிகள் அதிகமுள்ள நொறுங்கு தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும்.

நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் செரிமானச் சக்தியை அதிகரித்து அதிகப்படியான கொழுப்பு சேர்வதைத் தவிர்க்கலாம்.

இந்த மாதிரியான உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் நொறுக்குத் தீனிகளையும் தவிர்க்கலாம். உணவைத் தவிர்க்காமல் சரியான நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். குறிப்பாக இரவு உணவைத் தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிலும் இரவு நேரத்தில் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளைத் தவிர்த்து எளிதான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூக்கமும் உடல் எடைக்கும் நலனுக்கும் அவசியமாகிறது.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால், மன அழுத்தமின்றி ஒரு நாளைக்குக் குறைந்தது 8 மணி நேரம் தூங்கி எழ வேண்டும். இதோடு சேர்த்து தினசரி சிறிது நடைப் பயிற்சி செய்தால் போதுமே தவிர உடல் எடை குறைக்க வேறு எந்த மெனக்கெடலும் தேவையிருக்காது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *