வந்தாச்சு குட் நியூஸ்..குழந்தை பிறந்தால் ரூ.25,000 கிடைக்கும்..!

Advertisements

ஆந்திராவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், அதை ஊக்குவிக்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு புதிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கையை அறிவித்துள்ளார். இந்த கொள்கை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

இதன் முக்கிய அம்சமாக, இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பிறப்பிற்கு ரூ.25,000 வழங்கப்படும். மேலும், மூன்றாவது குழந்தைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் 18 வயது வரை இலவசக் கல்வி போன்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன..

இந்த திட்டத்தின் கீழ், இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பிறக்கும்போது ரூ.25,000 ஒருமுறை நிதி உதவியாக வழங்கப்படும். மூன்றாவது குழந்தைக்கு 5 வயது வரை மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவி கிடைக்கும். மேலும், மூன்றாவது குழந்தைக்கு 18 வயது வரை அரசு அல்லது விடுதி பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும்.

மூன்றாவது குழந்தை பிறந்தால் தாய்க்கு 12 மாத ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், தந்தைக்கு 2 மாத விடுமுறையும் அளிக்கப்படும். மூன்று குழந்தைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் போது 15 நாட்கள் வெல்னஸ் விடுமுறை மற்றும் ரூ.50,000 உடல்நல நிதி வழங்கப்படும்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *